மர்ம பொருளை பிரித்தவர் மயங்கினார்!


 கடலில் மிதந்த மர்மப் பொருள் ஒன்றை பிரித்த நபர் அதிலிருந்து வெளியேறிய காற்றை நுகர்ந்ததால் மயங்கி வீழ்ந்த சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த தியாகராசா அன்ரன் (வயது-51) என்பவரும் அவருடைய மைத்துணரும் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

கரையிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் மர்மப் பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளது. எண்ணைக் கான் போன்று காணப்பட்ட குறித்த பொருளை அன்ரன் திறந்து பார்த்துள்ளார். அதிலிருந்து வெளியேறிய மர்மப் புகையை நுகர்ந்தை அடுத்து அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனை அடுத்து மைத்துணர் அவரை கரை சேர்த்து மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Blogger இயக்குவது.