பாதுகாப்புச்செயலாளர் – இந்திய பாதுகாப்பு ஆலோசகரிடையே சந்திப்பு!


 இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை நேற்று (27) சந்தித்தார்.

​கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை, புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான வழிகள் ஆகியவை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் நாளை நடைபெறவுள்ள 4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கடல்சார் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.