எல்பிஎல் ஆட வந்த கனடா வீரருக்கு கொரோனா!


 லங்கன் பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடருக்காக நேற்று (18) இலங்கைக்கு வருகை தந்த கனடா கிரிக்கெட் வீரர் ரவீந்திரபால் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அன்ரு ரசல் உள்ளிட்ட மேற்கிந்திய வீரர்கள் சிலருடன் இவர் நேற்று நாட்டு வந்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் தனிமைப்படுத்தலில் இருக்கும் அவருக்கு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதியானது.

இவர் கொழும்பு கிங்ஸ் அணியின் வீரராவார்.

இதேவேளை கொழும்பு கிங் அணியின் பயிற்றுவிப்பாளர் கபீர் அலிக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

Blogger இயக்குவது.