சிறுநீர் கழிப்பதை தட்டிக்கேட்டவரை உயிருடன் எரித்த நபர்!


 இந்தியாவில் சிறுநீர் கழிப்பதை தட்டிக்கேட்ட பாதுகாவலர் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் போசாரி தொழில்துறை பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

செவ்வாய்க்கழமை மதியம், தொழில்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தின் பிரதான வாயிலில் பாதுகாவல் பணியில் 41 வயதான Shankar Wayphalkar என்ற நபர் இருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் மகேந்திர பாலு கதம் (31), வாகனத்தை நிறுத்திவிட்டு, நிறுவனத்தின் உரிமையாளர் கார் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இதை பாதுகாவல் பணியில் இருந்து Wayphalkar தட்டிக்கேட்க கோபமடைந்த கதம் அங்கிருந்து சென்றுள்ளார்.

ஆனால், மாலை 4:30 மணிக்கு திரும்பி வந்த கதம், Wayphalkar மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இதில் தீ காயமடைந்த Wayphalkar தற்போது மருத்துவமனையில் சிகிச்சை் பெற்று வருகிறார்.

பின்னர், ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த பொலிசார், கொலை முயற்சி உட்பட பல்வோறு பரிவுகளில் கதம் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Blogger இயக்குவது.