வீடுகளில் மரணமடையும் கொரோனா நோயாளிகள்! காரணம் என்ன?


 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் வீடுகளில் மரணடைந்து வருவது தொடர்பில் ஆராயும் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

அவர்கள் வேறு நோய் தாக்கங்களினால் மரணமடைந்தார்களா? அல்லது அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் மரணமடைந்தார்களா?அதுமட்டுமன்றி நோயின் தாக்கம் அதிகரித்ததால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதா? என்று ஆராயவேண்டியுள்ளது.

அதற்கான பொறுப்பை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கேட்டு செயற்படவேண்டும்.

நோயாளர்களை பராமரிக்கும் நடவடிக்கைகளோ நிறுத்தப்படவில்லை. அவை தடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதனால் நோயுள்ளவர்கள் பயமின்றி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம்.

எனினும் அவ்வாறான மரணங்கள் தொடர்பில் காரணங்களை கண்டறிய நாட்டிலுள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனைகளை முன்னெடுத்து அதற்கான காரணங்களை வெளிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.