நானும் நீயும்.....கவிதை!!

 


ஆண்மையின் இலக்கணம் நீ

அதற்கேற்ற ஆணவம் நான்..
நீ கதிராக இருந்து விட்டுப் போ
கம்பி மத்தாப்புக் கண்கள் எனக்கு..
அடங்க மறுக்கும் அணையாத்
தீயான உன்
அக்னிச் சுவாலை நான்
நான் நானாகவே...
நீ நீயாகவே...
ஆனால்,
உன்னை எனக்காகவும்
என்னை உனக்காகவும்
எத்துனை நேர்த்தியாகப்
படைத்திருக்கிறது இயற்கை..
ஒப்பிட முயன்று
தடுமாறிப் போகும்
தராசுத் தட்டு, நம்மை
ஒன்றாகச் சேர்த்து
ஆசீர்வதிக்கும்...
அன்பெனும் நெருப்பில்
ஆகுதி ஆகிப் போவோம்
வா....
தமிழி
Blogger இயக்குவது.