தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற 10 பேருக்கு ஏற்பட்ட நிலை!

 


மொரட்டுவ பகுதியில் இருந்து சாவகச்சேரிக்கு தளபாட விற்பனைக்காக வந்த 10 பேர் சாவகச்சேரி சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மூன்று வாகனங்களில் தளபாடங்களுடன் வந்த 10 பேர் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளனர்.

பின்னர், கிராமங்களுக்குள் கால் நடையாக சென்று தளபாட விற்பனைகளை மேற்கொள்ள தயாராக இருந்துள்ளனர்.

இது தொடர்பில் சாவகச்சேரி சுகாதார பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த வீட்டுக்கு சென்ற சுகாதார பிரிவினர், வீட்டில் இருந்த 10 பேரையும் அதே வீட்டில் சுய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

Blogger இயக்குவது.