கிளிநொச்சியில் 13 பேருக்கு கொரோனா!
கிளிநொச்சியில் 785 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 458 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்று முன்தினம் வரை 13 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் நேற்று அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், .
மாவட்டத்தில் கடந்த வாரம் சமூக தொற்றுடைய கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
பாடசாலைகளையும் ஒரு வாரம் முடக்கி வைத்திருந்தோம். இவற்றை தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தோம் என்றார்.
கருத்துகள் இல்லை