மாத்தளையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா!

 


மாத்தளை கொங்காவலை பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக மாநகர பிரதான சுகாதார அதிகாரி செந்தூரன் தெரிவித்தார்.

இவர் மாத்தளை கொங்காவலை பகுதியில் வர்த்தக துறையில் ஈடுபடுபவர் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவரின் வர்த்தக நிலையத்திற்கு அருகில் உள்ள சகல வர்த்தக நிலையங்களில் பணிபுரிபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நகரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்திட பூரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொற்றாளியின் வர்த்தக நிலையம் முத்திரை இடப்பட்டுள்ளதுடன் அங்குள்ள ஊழியர்களும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தபடவுள்ளதாக பிரதான பொது சுகாதார பரிசோதகர் செந்தூரன் தெரிவித்தார்.

தற்பொழுது மாத்தளை நகர கொட்டுவே கெதர பகுதியில் 2 கொரோனா தொற்றாளர்களும் மாத்தளை களுதாவளை பகுதியில் ஒரு கொரோனா தொற்றாளரும் மொத்தம் நான்கு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் செந்தூரன் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.