இலங்கையின் கல்வி முறையில் மாற்றம் வேண்டும்!

 


கல்வி மறுசீரமைப்பினூடாக இன ரீதியாக பிரிந்து செல்லும் நிலைமை மாற்றப்பட வேண்டும். கல்வியூடாக மனிதப் பண்புகளை வெளிக் கொண்டு வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

கல்வி என்பது வெறுமனே பட்டதாரிகளையும் துறைசார்ந்தவர்களையும் உருவாக்குவது மாத்திரமல்ல. மனிதனுக்குள் இருக்கும் மனிதப் பண்புகளை வெளிக் கொண்டு வர வேண்டும்.

அத்தனை தூதுவர்களும் மார்க்க வழிகாட்டிகளும் கற்றவர்களாக இருந்தார்களா? என்பதை விட மனிதர்களையும் மனித மனங்களை புடம்போடக்கூடியவர்களாக இருந்தார்கள். நல்ல மனிதப் பண்புள்ளவர்களை உருவாக்குகின்ற கல்விமுறையே இன்று தேவை.

ஆனால் அதனை செய்ய பல்கலைக்கழகங்கள் தவறிவிட்டன. சமயத் தலைவர்கள், பெரியவர்கள் மனங்களை எவ்வாறு மாற்றினார்களோ அவ்வாறு மாற்றும் வகையில் கல்வி அமைய வேண்டும். மக்கள் மக்களாக வாழும் கல்வி முறை உருவாக வேண்டும். கல்வி முறை மாற்றப்பட வேண்டும். எமது நாட்டில் உள்ள வளங்களில் உச்ச பயனை அடைய வேண்டும். அது பற்றி கல்வியூடாக கற்பிக்கப்படவில்லை. வெறுமனே புத்தகக் கல்வியுடன் நின்று விடாது ஆக்கபூர்வமாக சிந்திக்கும் வகையில் கல்வி முறை மாற்றப்பட வேண்டும். மனித குலத்தை தாக்கத் தேவையான அனைத்தும் கல்வியூடாக பெறப்படுகிறது. ஒன்று சேர்ந்து வாழ்வதை கல்வி போதிக்க வேண்டும். தமிழர் முஸ்லிம். சிங்களவர் என பிரிந்து செல்லும் நிலை மாற வேண்டும்.

அக்கறைப்பற்று கல்வி வலயத்தில் ஒரு பகுதி ஆலையடிவேம்பு மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் திருக்கோவிலுடன் சேர்கிறார்கள்.பொத்துவில்லிலுள்ள சிங்கள பாடசாலைகள் அம்பாறையுடன் சேர்கின்றன. பொத்துவில்லிலுள்ள தமிழ் பாடசாலைகள் திருக்கோவிலுடன் சேர்கிறது. இவ்வாறான முரண்பாடான நிலை மாற வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.