இலவசமாக போடப்படும் கொரோனா தடுப்பூசி


 பின்லாந்து நாட்டில் தடுப்பூசி இலவசமாக போடப்படவுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:-

பின்லாந்து மக்களை உரிமம் பெற்ற கொரோனா தடுப்பூசி மூலம் பாதுகாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. யாருக்கெல்லாம் விருப்பம் உள்ளதோ, அவர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதல் தடுப்பூசி கிடைத்து விடும். அதனைத்தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.

மருத்துவ பணியாளர்கள், முதியோர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமையளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.