பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பிய தொற்றாளி!
களுத்துறை – அத்துலுகமை, பண்டாரக பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர் மீது துப்பிய கொரோனா தொற்றாளி ஒருவர் இன்று (04) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கடந்த 2ம் திகதி வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்ற முயன்ற போது இவ்வாறு துப்பியுள்ளார்.
இவரை இன்று பாணந்துறை நீதிமன்றில் ஸ்கைப் மூலம் ஆஜர்ப்படுத்திய போது 17ம் திகதி வரை மறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை