தென்மராட்சியில் 2 ஆயிரம் பேர் இடம்பெயர்வு!
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் புரேவி புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இப் பிரதேச செயலக பிரிவில் சுமார் 2,139 பேர் தங்களின் இருப்பிடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்த்துள்ளார்கள். இவர்களுள் 54 குடும்பங்களை சேர்ந்த 198 பேர் 5 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை,
கைதடி வடக்கு, மட்டுவில் சந்திரபுரம் மோகனதாஸ் வீதியில் தேங்கியுள்ள வெள்ளம் பிரதேச செயலரின் அறிவுறுத்தலுகமைய கனரக இயந்திரமூடாக இன்று வெட்டி அகற்றப்படுகிறது.
கருத்துகள் இல்லை