கைக்குண்டுகள் மீட்பு!
திருகோணமலை – சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த தகவலுக்கமைய நேற்று (04) அப்பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டப்போது, ஐந்து கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை