வெளிநாடுகளிலிருந்து இன்று 269 இலங்கையர்கள் நாட்டுக்கு!


 கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 269இலங்கையர்கள் இன்று ( சனிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்தனர்.

இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும், டுபாயில் இருந்து 76 பேரும், கட்டாரின் டோஹா நகரில் இருந்து 47பேரும் இந்தியாவின் சென்னை நகரில் இருந்து 45 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்றைய தினமும் 476 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்திருந்தனர். அவர்களும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.