மிருகக்காட்சிசாலையில் 4 சிங்கங்களிற்கு கொரோனா!
ஸ்பெயினின் பார்சிலோனா மிருகக்காட்சிசாலையில் நான்கு சிங்கங்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளன.
மிருகக்காட்சி சாலையின் இரண்டு ஊழியர்கள் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தாலும், சிங்கங்கள் எப்படி தொற்றிற்குள்ளாகின என்பதை உறுதியாக கூற முடியாதென மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் ஏப்ரல் மாதத்தில் நான்கு புலிகள் மற்றும் மூன்று சிங்கங்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருந்தன. இதன் பின்னர் பார்சிலோனா மிருகக்காட்சி சாலையிலேயே மிருகங்கள் தொற்றிற்குள்ளானது பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 பெண் சிங்கங்கள், ஒரு ஆண் சிங்கம் தற்போது தொற்றிற்குள்ளாகியுள்ளன.
நவம்பர் மாதத்தில் இரண்டு ஊழியர்கள் தொற்றிற்குள்ளான பின்னர், மிருகங்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் சிங்கங்கள் தொற்றிற்குள்ளானது தெரிய வந்துள்ளது.
“மிகவும் இலேசான காய்ச்சல் நிலைக்கு ஒத்ததாகும்” என்று மிருகக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிங்கங்கள் சுவாச அறிகுறிகளைக் காட்டவில்லை, ஆனால் இன்னும் இலேசான இருமல் மற்றும் தும்மலைக் கொண்டிருந்தன.
சிங்கங்களுக்கு மற்ற விலங்குகளுடன் எந்த தொடர்பும் இல்லாததால் பரவலான நோய்த்தொற்றுகள் இருக்காது என மிருகங்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை