கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் பலி!


 நுவரெலியா – டிக்கோயா, டங்கன் தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் காணப்பட்ட மணியின் கயிற்றில் விளையாடிய சிறுவன் ஒருவன், குறித்த கயிறு கழுத்தில் உயிரிழந்துள்ளான்.

இன்று (11) காலை இடம்பெற்ற இந்த சோகச் சம்பவத்தில் நோவூட் தமிழ் பாடசாலை ஒன்றில் பயிலும் 8 வயது சிறுவனே உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவனின் தாய் தொழிலுக்காக வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இச்சிறுவன் ஆலயத்தின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இத்தருணத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.