பயணிகள், நடத்துனர்களுக்கான அறிவித்தல்!


 பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் விபரங்களினை நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பயணிகளின் விலாசம் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களை நடத்துநர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

பஸ்களில் பயணிக்கும் பயணியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அடையாளப்படுத்த இந்த செயற்பாடு உதவியாக அமையும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.