சிறுமி துஷ்பிரயோகம்; 20 ஆண்டுகள் சிறை!
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 07 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குற்றவாளிக்கு 75,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 18 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்துள்ளார்.
கிண்ணியாவில் 2012ம் ஆண்டு 13 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 58 வயதுடையே நபருக்கே இந்த தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை