நிலவில் மாதிரிகளை பெற்று திரும்பியது சீனா விண்கலம்!


 சீனாவின் சாங்கே-5 (Chang’e-5) விண்கலம் நிலவில் இருந்து கல், மண் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.

இந்த விண்கலம், நெய் மங்கோல் என்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் தரையிறங்கியது.

அமெரிக்காவின் அப்பலோ மற்றும் சோவியத் ரஷ்யாவின் லூனா திட்டங்கள் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன், நிலவில் இருந்து மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர் இப்போது சீனா நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளது.

இந்த மாதிரிகள், நிலவின் மண்ணியல் மற்றும் ஆரம்ப கால வரலாறு குறித்து அறிந்துகொள்ள உதவக்கூடும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் ஏவப்பட்ட சங்கே – 5 விண்கலத்தின் நிலவை சுற்றிவரும் சுற்றுவட்டக் கலனில் இருந்து ஒரு பகுதி நிலவில் தரையிறங்கியது. தொடர்ந்து நிலவின் மேற்பரப்பில் துளையிடும், அள்ளும் கருவிகள் உதவியோடு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த விண்கலம் மொத்தம் இரண்டு நாட்கள் மட்டுமே நிலவில் செலவழித்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.