பிரித்தானிய விமான சேவைக்கு இலங்கையிலும் தடை!


 ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து வரும் விமானங்கள் நாளை (23) அதிகாலை 2 மணிக்குப்பின்னர் இலங்கையில் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, மறு அறிவித்தல் வரும்வரை பிரித்தானிய விமானங்கள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.