ஆறாக மாறிய வயல்!


 மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் பதினையாரித்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்கள பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.

குளங்கள், அணைக்கட்டுக்கள் மூலம் வரும் நீரினால் வயல் நிலங்கள் ஆறு போன்று காட்சியளிப்பதுடன், நீரின் ஓட்டம் அதிவேகத்தில் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக வயல் பிரதேசங்களில் வாழும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சில விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு பாரிய சிரமங்களுக்கு மத்தியில் வயல் நிலங்கள் ஊடாக தோணியில் பயணம் செய்து வெள்ள நீர் இல்லாத இடங்களுக்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.