அந்தாட்டிக்காவிலும் கொரோனா!


 உலகில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து தப்பியிருந்த அந்தாட்டிக்கா கண்டத்திலும் இறுதியாக கொரோனா வைரஸ் நுழைந்துள்ளது.

அந்தாட்டிக்காவில் அமைந்திருக்கும் சிலி நாட்டு ஆராய்ச்சிக்கூடமான பெர்னார்டோ ஓ ஹிகின்ஸ் தளத்தில் தங்கியிருந்த 26 சிலி இராணுவ வீரர்கள் மற்றும் 10 ஆராய்ச்சி நிலையப் பராமரிப்பாளர்கள் என மொத்தம் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று உறுதியான 36 பேரும் சிலி நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள புன்டா அரினாஸ் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.