இறந்த உடலில் 48 மணி நேரத்தின் பின்னும் வைரஸ் உள்ளது!


 காலி – காரப்பிட்டிய வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை தொடர்ந்தும் வைத்திருப்பது தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் தினமும் 10 பேர் வரை மரணிப்பதால், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை வைத்திருக்க அவர்களுக்கு வசதியில்லை என்று வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவும் அச்சம் இருப்பதால் ஏனைய இறந்த உடல்களுடன் கொரோனா தொற்றுடைய உடல்களை வைத்திருக்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை 48 மணி நேரத்திற்கு பின்னர் பரிசோதனை செய்த போது, இன்னும் உடலில் வைரஸ் காணப்படுவது கண்டறியப்பட்டது என வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் வரை கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள கொரோனாவால் இறந்த ஒருவரது சடலத்தை தகனம் செய்யாது வைத்திருக்க வேண்டுமென காலி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.