கொரோனா அச்சத்தால் மூதாட்டி தற்கொலை!


 கம்பஹா – வத்தளை, வெதிகந்தயில் மூதாட்டி ஒருவர் தீமூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொரோனா அச்சத்தால் இவ்வாறு தற்கொலை செய்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

ஐந்து பிள்ளைகளின் தாயான இவர், தினமும் கொரோனா தொடர்பான செய்திகளை செவிமடுத்த வந்த நிலையில், தனக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சப்பட்டார் என்றும், பின்னர் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையின் போது அவரது மகன் தெரிவித்தார்.

மேற்கொண்டு சடலத்தின் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை நவம்பர் மாதம் கொரோனா அச்சம் காரணமாக இருவர் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.