சுனாமி நினைவேந்தலுக்கு தடை!


 சுனாமியால் உயிரிழந்தவர்களின் உறவுகள் கூடி அஞ்சலிக்கத் தடை விதிக்கும் அரசு மாவட்டச் செயலகங்களில் நிகழ்வுகளை நடாத்த அனுமதி வழங்கியுள்ளமை கவலை அளிப்பதாக உறவுகளால் தெரிவிக்கப்படுகிறது.

சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சிகளுக்கான அனுமதியை கொரானாவை காரணம் காட்டி வழங்க மறுக்கும் அரசு சர்வதேசத்திற்கு படம் காட்ட மாவட்ட செயலகங்களில் சுனாமி நினைவு தினத்தைக் கடைப்பிடிக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நிகழ்விற்கான நிதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உறவுகளை இழந்தவர்கள் உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலிக்க அனுமதி மறுத்து விட்டு அரச நிதியில் மாவட்ட செயலகத்தில் யாரோ கூடி கூட்டம் வைப்பதில் என்ன மனுதர்மம் உள்ளது என உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.