ஆய்வாளர் தொ.பரமசிவன் மரணம்!
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் இன்று(24) காலமானார். அவருக்கு வயது 70.
தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் பேராசிரியர் தொ.பரமசிவன் தவிர்க்க முடியாத பெயர். நாட்டார் வழக்காறு சார்ந்த பார்வையில் புது வெளிச்சம் பாய்ச்சியவர். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்தவை இவரது ஆய்வுகள். ‘திராவிடம்’ எனும் சிந்தனை எப்படித் தமிழ் மண்ணில் உருக்கொண்டது, அதற்கான வரலாற்றுப் பண்பாட்டுப் பின்னணி என்ன என்று தர்க்கபூர்வமாக நிலைநாட்டியவர்.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950ஆம் ஆண்டு பிறந்த தொ.பரமசிவன், செயின்ட் சேவியர் கல்லூரியிலும், காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் தமிழ் பயின்றார். தமிழ்ப் பேராசிரியராகப் பணி வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இளையாங்குடி டொக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் பணியாற்றினார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக 9 ஆண்டுகள் பணியாற்றினார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை