ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தலை அனுஷ்டித்த முன்னணி!


 சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பி ‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கட்சியின் பொதுச் செயலாளரும் எம்பியுமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவரும் எம்பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கட்சியின் உளளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலர் மலரஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.