ஓட்டமாவடியில் டெங்கின் ஆட்டம் தீவிரம்!


 மட்டக்களப்பு – ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டிசம்பர் மாதம் மாத்திரம் 268 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாெக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரித்து காணப்படும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் டாெக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தல் நிகழ்வு இன்று (25) வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்ட விபரத்தை வெளியிட்டார்.

அத்துடன் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 24 திகதி வரை 747 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் மரணித்துள்ளதாகவும், இந்த மாதம் 268 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.