முஸ்லிம்களின் சடல எரிப்பை கண்டித்து யாழில் போராட்டம்!


 கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம்களின் உடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (28) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அரசே உமது பலத்தை சிறுபாண்மையின் மீது கட்டவிழ்க்காதே, கிறிஸ்தவ, முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கை வைக்காதே, கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம்களின் உடலங்களை நல்லடக்கத்திற்கு அனுமதியளித்துடு’ எனப் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருதனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.