தம்மிக்கவின் ‘பானி’ பருகிய நபருக்கும் கொரோனா!


 தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்து என கூறப்படும் சிறப்பை பருகிய ஒருவருக்கு கேகாலை – வரகாபொலயில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இதனை திவயின சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. வரகாபொலயில் நேற்று 12 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் ஒத்தம்பிட்டியை சேர்ந்த ஒருவரே குறித்த சிறப்பை பருகிய நிலையிலும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த பண்டாரவின் மருந்தை சுகாதார அமைச்சரே பருகி அறிமுகம் செய்து வைத்திருந்தார். அத்துடன் கொரோனா தடுப்பு மருந்தாக அல்லாமல் அதனை பயன்படுத்த ஆயுர்வேத திணைக்களத்தின் ஆய்வு குழு அனுமதித்ததாக அரச தரப்பு கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.