நெல்லியடி பஸ் நிலையத்தில் பிளாஸ்ரிக் போத்தல் சேகரிப்பு!


 நெல்லியடி நகரில் ‘வளமிகு நெல்லியடி 2022’ என்ற தொனிப்பொருளில் ஆசிரியர்ளான மதிதீபன், நிரோஜ் ஆகியோரின் மேற்பார்வை மற்றும் பங்குபற்றலில் நான்காம் கட்டமாக நெல்லியடி பேருந்து நிலையத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தின் நலன்கருதி பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கும் பாதுகாப்புக்கூடு ஒன்று இன்று (28) பொதுமக்கள் பாவனைக்காக வைக்கப்பட்டது.

நெல்லியடி சதுரங்க கழகத்திற்கும் வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபைக்கும் இடையில் நடந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையை அடுத்து ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் இரு அமைப்புக்களும் பங்குதாரர்களாக இந்த செயற்பாட்டில் இணைந்துகொண்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.