முஸ்லிம் லீக் வழங்கிய 5 மில்லியன் டொலர் எங்கே ?


 ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிந்தளிப்பதற்காக உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என விஜேயதாச ராஜபக்ஷ் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும்,

“2019 ஜூலை மாதம் உலக முஸ்லிம் லீக் அமைப்பின் சமாதான சம்மேளனம் மாநாடு கொழும்பு தாமரைத் தடாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டிருந்த உலக முஸ்லிம் லீக் அமைப்பின் செயலாளர் ஷேக் மொஹமட் பின் அப்துல் கரீம் அல் ஈஸா வினால் 5 மில்லியன் ரூபா கொடையாக வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படிருந்தது.

குறித்த நன்கொடையான சுமார் 5 மில்லியன் டாெலர் (92 கோடி ரூபா) ஈஸ்டர் தாக்குதலில் மரணித்தவர்களின் உறவினர்களுக்கு மற்றும் தாக்குதலில் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் நல நோம்புகளுக்காக கிடைக்கப் பெறவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.