மாடுகளை திருடிய கும்பல் சிக்கியது!


 மாடுகளைத் திருடி இறைச்சிக்காக வெட்டிய ஐந்து பேரை மட்டக்களப்பு -ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து இரண்டு மாடுகள் முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு மாடுகளின் வெட்டப்பட்ட இறைச்சி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இம்மாடுகள் மயிலம்பாவெளி பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்குச் சொந்தமானவை. கடந்த 3 தினங்களில் அப்பண்ணையாளரது பத்து மாடுகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறையிட்டிருந்தார்.

Blogger இயக்குவது.