பாணந்துறை 85 பணியாளர்கள் கொரோனா!


 மாஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் பாணந்துறை உனிச்செல்ல ஆடைத்தொழிற்சாலையில் 85 பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் மாஸ் ஹோல்டிங் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தமது பணியாளர்கள் மத்தியிலான கொரோனா தொற்று தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உரிய சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி வருவதாக நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது பணியாளர் ஒருவருக்குக் காய்ச்சல் குணங்குறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது கொரோனா கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் நேற்று வரையில் மேற்கொள்ளப்பட்ட 1123 பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது 85 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.