திருநாவற்குளத்தில் பொலிஸ் அதிகாரி குடும்பத்திற்கு கொரோனா!


 வவுனியா – திருநாவற்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த 15ம் திகதி இவர்களிற்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவர்களிற்கு தொற்று ஏற்ப்பட்டுள்ளமை நேற்று (17) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.