கிளிநொச்சியில் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில்!


 கிளிநொச்சியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையினால் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை சில குளங்கள் வான்பாய்ந்து வருகிறது. அதாவது, கனகாம்பிகைகுளம் 7 அங்குலம் வான்பாய்ந்து வருவதுடன் பிரமந்தனாறு குளம் 3 அங்குலம் வான் பாய்கின்றது.

இவ்வாறு பிரமந்தனாறு குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதால், பிரமந்தனாறு – மயில்வாகனபுரம் பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.