கல்குவாரியை மீள இயக்க கோரி போராட்டம்!
பண்டாரவளை – பதுளை பிரதான வீதியை மறித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.
தெமோதரை எல்லந்த பகுதியில் இயங்கிவந்த சுமார், சுமார் 100 வருடங்களுக்கு மேல் பழமையான கல்குவாரிக்கு, கடந்த ஒரு மாதக்காலமாக அனுமதிபத்திரம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏங்கு நிரந்தரமாக பணிப்புரிந்த 45 குடும்பங்களை சேர்ந்த 100 இற்கும் அதிகமானவர்கள் பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த தெமோதரை எல்லந்தை பகுதியில் அமையபெற்றிருக்கும் இந்த கல்குவாரியை இயங்கச் செய்வதற்கான வழிமுறைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
கருத்துகள் இல்லை