கிளிநொச்சியில் உருவானது பாலு மகேந்திரா நூலகம்!


 தமிழ் சினிமாவின் முன்னோடியும், ஈழத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் காலடி பதித்து பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் நினைவாக பாலு மகேந்திரா நூலக வலைத்தளம் நேற்று(27) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இணைய வாயிகாக இடம்பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் ஈரான் திரைத்துறையின் புகழ்பூத்த இயக்குநர் மஜித் மஜீதி முதன்மை அதிதியாக கலந்து கொண்டு தனது அனுபவங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தமையானது ஈழ சினிமாவின் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

அதுமட்டுமன்றி, இயக்குநர் பாரதிராஜா, சிங்கள இயக்குநர் பிரசன்ன விதானகே, ஈழ வானொலிச் சேவையின் முன்னோடி அப்துல் ஹமீத், சூப்பர் சிங்கர் புகழ் சின்மயி, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ரகுராம், சிரேஸ்ட ஊடகவியலாளர் சர்வானந்தா, மௌனகுரு, சுஜித்ஜீ, தம்பிஐயா தேவதாஸ் எனப் பலரும் கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களையும், அனுபவங்களையும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் அமையப் பெற்றுள்ள இந்த பாலு மகேந்திரா நூலகத்தின் வலைத்தளமானது நேற்றிலிருந்து(27) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் 10000 ற்கும் மேற்பட்ட டி.வி.டிக்கள் மற்றும் பாலு மேந்திராவின் குடும்பத்தார் அன்பளிப்புச் செய்த புத்தகங்கள், சஞ்சிகைகள் என சினிமா ரசிகர்களுக்குப் பயனுள்ள பல்வேறு வசதிகளைக் கொண்டு அமையப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மஜீத் மஜீதி, பாரதிராஜா, பிரசன்ன விதானகே உள்ளிட்ட இன்னும் பலர் தெரிவித்த கருத்துக்களை தெரிந்து கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தி பார்வையிடுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.