மேலும் மூவர் கொரோனாவால் மரணம்!
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (28) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 21 நாட்களேயான சிசு உட்பட 194 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட 46 நாட்களேயான சிசு உட்பட 13 பேர் இதுவரை தற்கொலை, விபத்து, துப்பாக்கி சூடு மற்றும் பிற நோய்கள் காரணமாக மரணமடைந்துள்ளனர். இவர்களில் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக சிறைகளில் இருந்து தப்பிக்க முயன்ற போது மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை