முஸ்லிம்களின் உடலை புதைக்க மாலைதீவு தயாராகிறது!


 கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதால் முஸ்லிம் சமூகத்தில் எழுந்துள்ள கவலையையடுத்து கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசு முன்வந்துள்ளது என்று டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி மாலைதீவு அரசு இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் தனது வாய்ப்பினை வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விரைவில் ஒரு பதிலை அனுப்பும் வகையில் வழிகாட்டுதல்களை உருவாக்கி, அத்தகைய கோரிக்கையின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு வெளியுறவு அமைச்சு சுகாதார அமைச்சுக்கு தெரிவித்துள்ளது.

மாலைதீவில் பல தீவுகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி, கொரோனா தொற்றால் உயிரிழந்தோரை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கை போன்று எந்தவொரு பிரச்சினையையும் நாடு எதிர்கொள்ளவில்லை என்று காதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்தா ஹேரத் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட், தனது டுவிட்டரில் “இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் இலங்கையில் கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் இறுதி சடங்குகளை மாலைதீவில் நடத்த வழிகுத்து இலங்கைக்கு உதவுவது தொடர்பில் அதிகாரிகளுடன் தமது ஜனாதிபதி ஆலோசித்து வருவதாக” பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.