வருகிறது காலநிலை மாற்றம்!


 நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எனினும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.