சிசு இறப்பில் சந்தேகம்; பெற்றோரால் ரிட் மனு தாக்கல்!


 கொரோனா தொற்றால் மரணித்த 21 நாட்களேயான சிசுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தும், மருத்துவ அறிக்கையை கோரியும் சிசுவின் பெற்றோரால் இன்று (23) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு-15ஐ சேர்ந்த முஹம்மட் மஹ்ரூப், மொஹம்மட் பாஹிம் மற்றும் பாத்திமா சப்னாஸ் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன, ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜயசூரிய, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட மேலும் நால்வரை இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Blogger இயக்குவது.