அனைலதீவில் ஆயுதமுனையில் கொள்ளை!
ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் நேற்று முன்தினம் (22) இரவு பெண் தலைமைத்துவக் குடும்பம் வசிக்கும் வீடு ஒன்றுக்குள் நுழைந்த மூவர் அடங்கிய திருட்டுக் கும்பல் ஆயுத முனையில் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் 119 க்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், மறு நாள் தடயவியல் பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் துணையுடன் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதன் தொடராக நேற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
திருட்டு நடவடிக்கையின் சூத்திரதாரி அனலைதீவைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய இருவரும் வேலணை உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மூவர் மட்டுமே திருட்டில் ஈடுபட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துவரும் நிலையில் இதுவரையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை