கொள்ளுப்பிட்டி கட்டடம் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி!


 கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் வெள்ளத்தில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் நேற்று (29) இரவு பெய்த மழையினால் டுப்ளிகேஷன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் கீழ்தளமே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

குறித்த கட்டடத்தில் நிர்மாணப்பணியில் ஈடுபடுகின்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் குறித்த கட்டடத்தின் கீழ்தளத்தில் மேலும் 5 பேர் சிக்கி இருந்த நிலையில் அவர்கள் உயிர்தப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.