உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் கடமையேற்றார்!


 தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டிருந்த உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் நேற்று (28) கடமையேற்று சேவைகளை ஆரம்பித்துள்ளார் என்று தெல்லிப்பழை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் நியமனம் தொடர்பில் வைத்தியசாலையின் மருத்துவர்கள் அண்மையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.