பியகமயில் போலி நாணய தாள்களுடன் மூவர் கைது!


 கம்பஹா – பியகம பகுதியில் போலி நாணயத்தாள்களை தயாரித்து அவற்றை செல்லுபடியாகும் பணத்துடன் ஒன்று சேர்க்கும் மோசடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களை அச்சிட்ட பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடமிருந்து 14 போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும், 33,250 ரூபாய் செல்லுபடியாகும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணையில் 5 போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும், 11,860 ரூபாய் செல்லுபடியாகும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Blogger இயக்குவது.