உடுவில் முடக்கம் தளர்வு!


 உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (12) இரவு அமுலான முடக்க நிலை இன்று (13) சற்றுமுன் தளர்த்தப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையினரின் ஆலோசனைக்கு அமைவாக இவ்வாறு முடக்க நிலை நீக்கப்பட்டுள்ளதாக மகேசன் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்ந்தும் 14 நாட்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை மருதனார்மடம் சந்தை, விற்பனை நிலையங்கள் மற்றும் உடுவில், தெல்லிப்பழை ஆகிய கோடடத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.