தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
இன்றும் (24), நாளையும் (25) கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெறும் வழிபாட்டுத் தலங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள், உதவி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை