நடிகை கயல் ஆனந்திக்கு திடீர் திருமணம்!


 தெலுங்கு சினிமா மூலம் நடிகையாக அறிமுகமான ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பொறியாளன்’ படம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘கயல்’ படத்தில் நடித்த அவரது நடிப்பு பெரும் வரவேற்பு பெற்றதால் ‘கயல்’ ஆனந்தி என்று அழைக்கப்பட்டவர் தொடர்ந்து ‘சண்டிவீரன்’, ‘விசாரணை’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.

’டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்’, ’ஏஞ்சல்’, ’அலாவுதீனின் அற்புத கேமரா’, ’ராவணக் கூட்டம்’, ’கமலி ஃப்ரம் நடுக்காவேரி’, தெலுங்கில், ’ஜாம்பி ரெட்டி’ ஆகிய படங்கள் ஆனந்தி நடிப்பில் வெளியாக உள்ளன. ஆனால், கொரோனா பிரச்சினையால் இந்த திரைப்படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகை ஆனந்திக்கும், தெலுங்கானாவை சேர்ந்த தொழிலதிபர் சாக்ரடீஸ் என்பவரும் இன்று திருமணம் நடைபெறுகிறது. ஆனந்தியின் இந்த திடீர் திருமணம் காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது.

அதே சமயம், ஆனந்திக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் தான் அவர் திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனந்தி – சாக்ரடீஸ் திருமணம், இன்று இரவு வாராங்கல்லில் நடக்க உள்ளது. இந்த திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்தவர்கள் யாரையும் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.